ஆசிரியர் தகுதித்தேர்வு - நீதிமன்றம் இடைக்கால தடை

Last Modified : 01 Jan, 1970 05:30 am
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு சேர டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும். இதில் தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே அரசு ஆசிரியர் பணி கிடைக்கும். இந்நிலையில் 2011-ஆம் ஆண்டிற்கு முன்னர் ஆசிரியர் பணியில் இணைந்த அரசு ஆசிரியர்கள் வரும் 30-ஆம் தேதி நடைபெறும் தகுதித்தேர்வில் பங்கு கொண்டு தேர்வு எழுத வேண்டும் என மாநில பள்ளி கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த தேர்வில் தேர்ச்சிப் பெறாவிட்டால் பணியை இழக்க நேரிடும் எனவும் எச்சரித்திருந்தார். இதனை எதிர்த்து அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையின் போது நீதிபதி, பள்ளிக் கல்வித்துறை அதிகாரியின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்ததோடு, வழக்கு விசாரணையை 18-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close