மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுமா..???

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மதுரையைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதன்படி மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் 3000 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை உருவாகியுள்ளது. எனவே, பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசால் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையிலும் அமைக்கப்பட்டால் 15 க்கும் மேற்பட்ட தென் மாவட்ட மக்கள் பயனடைவதுடன் கேரள மாநில மக்களும் பயனடைவார்கள். எனவே, எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.செல்வம், ஆதிநாதன் ஆகியோர் இந்த வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் வரும் 15 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு உள்ளனர். ஏற்கனவே மத்திய அரசு, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்திருப்பது குறிப்பிட தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close