ஜெயலலிதா கைரேகை விவகாரம்; மருத்துவர் பாலாஜி அறிக்கை

Last Modified : 11 Apr, 2017 08:19 pm
தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தலின் போது அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகையை பெற, அப்போலோ மருத்துவர் பாலாஜிக்கு 5 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டதாக கடந்த இரு தினங்களாக ஊடங்களில் செய்தி வெளியானது. ஆனால் இந்த செய்தி பொய் என்றும், தனக்கு பணம் ஏதும் வழங்கப்பட வில்லை எனவும் மருத்துவர் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சுகாதாரத்துறை அமைச்சர், தனது உதவியாளர் மூலம் எனக்கு 5 லட்ச ரூபாய் கொடுத்ததாக கடந்த இரண்டு தினங்களாக செய்தித்தாள் மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியானது. இது முற்றிலும் தவறான செய்தியாகும். எந்த ஒரு செய்தித்தாள் மற்றும் ஊடகத்திற்கும் நான் இவ்வாறு பேட்டி அளிக்கவில்லை. எனக்கு எந்த பணமும் அளிக்கப்படவில்லை. எனவே இந்த மறுப்பு அறிக்கையை அனைத்து செய்தித்தாள் மற்றும் ஊடகங்களில் உடனடியாக வெளியிடும் படி கேட்டுக் கொள்கிறேன்," என தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close