டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 3 வாரங்களுக்கு மேலாக போராடி வரும் தமிழக விவசாயிகளை தேமுதிக மகளிர் அணி செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்தித்தார். மண் சோறு சாப்பிட்டு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் இணைந்து தானும் மண் சோறு சாப்பிட்டு தங்கள் கட்சியின் ஆதரவை பிரேமலதா தெரிவித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேமுதிக விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும். நதிகளை ஒன்றிணைப்பதே விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வாக அமையும். மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்," என தெரிவித்தார்.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.