டாஸ்மாக் கடையை அகற்ற போராடிய மக்கள் மீது போலீஸ் தடியடி

Last Modified : 11 Apr, 2017 05:20 pm
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் இன்று காலை முதல் போராட்டம் நடத்தி வந்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து கடை மூடப்படும் என உறுதி அளித்தப் பின்னரும் அங்கிருந்து கலைய மறுத்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போரட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் திடீரென தடியடி நடத்தினர். இதில் பொதுமக்களில் ஒருவரின் தலையில் விழுந்த அடியில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் தடியடியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல் துறை வாகனங்கள் மீது கல் வீச்சு நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. 9 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த போராட்டத்தை தடியடி மூலம் போலீசார் கலைத்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close