சேகர் ரெட்டிக்கு போலீஸ் காவல் நீட்டிப்பு

Last Modified : 01 Jan, 1970 05:30 am
கடந்த ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையின்போது ஏராளமான புதிய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் பழைய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கிவைத்திருந்ததாக தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரின் கூட்டாளிகளான பிரேம்குமார், சீனிவாசலு, திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரை சிபிஐ கைது செய்தது. இந்நிலையில், அவர்களது போலீஸ் காவல் நேற்றுடன் முடிந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள், வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நீதிபதி முன்பு நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, அவர்கள் மூன்று பேரின் காவலையும், வருகின்ற 25-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, ஜாமீன் வழங்கக் கோரி சேகர் ரெட்டி உள்ளிட்ட மூன்று பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close