மீண்டும் தாம் யார் எனக் காட்டிய தமிழக காவல்துறை

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் அய்யன்கோவில் செல்லும் சாலையில் நேற்று புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள், காலை 9:30 மணியில் இருந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ், சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மூடப்படும். எனவே, உங்கள் போராட்டத்தை நீங்கள் கை விட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளதை உறுதி செய்த பின்னரே போராட்டத்தை கைவிடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உறுதியாக இருந்தனர். டாஸ்மாக் கடை மூடப்பட்டு விட்டதா என பார்வையிடுவதற்காக, அவர்கள் செல்ல முற்பட்ட போதுதான், அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தில் 2 பெண்கள் உள்பட 8 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதில் சாமளாபுரத்தை சேர்ந்த சிவகணேஷ்(40) என்பவரின் தலை உடைந்து ரத்தம் கொட்டியது. காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போராட்டத்தின் போது, அங்கு, நடந்து சென்று கொண்டிருந்த அய்யம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரி(45) என்பவரின் கன்னத்தில் திருப்பூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் ஓங்கி அறைந்தார். இந்த காட்சி அங்கிருந்த செய்தியாளர்களின் கேமராக்களில் பதிவானது. பின்னர், தனியார் தொலைக்காட்சிகள் இந்தக் காட்சியை ஒளிபரப்ப, போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனுக்கு அனைவரும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். சாராயக் கடைகளை மூட வேண்டும் என போராட்டம் நடத்தும் பெண்களை காவல்துறையே தாக்கிய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close