மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம்

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் புதிதாகத் திறக்கப்படவிருந்த டாஸ்மாக் கடைக்கு எதிராக 100க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். காலை 9:30 மணியில் இருந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆயினும், டாஸ்மாக் கடையை திறக்க மாட்டோம் என உறுதி அளித்தால் மாத்திரமே அங்கிருந்து கலைந்து செல்வோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், திடீரென எம்.எல்.ஏ காரில் ஏறி புறப்பட, அங்கு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருப்பூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தலைமையிலான போலீசார், பெண்களை லத்தியால் மிகக் கடுமையாக தாக்கினர். அத்துடன், சாலையில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் கன்னத்தில் பாண்டியராஜன் ஓங்கி அறைந்தார். இந்தக் காட்சி தொலைக்காட்சிகளில் வெளியானதை அடுத்து, அவருக்கு எதிராக பலரும் தங்கள் கண்டன குரல்களை எழுப்பினர். இதனிடையே, பெண்ணின் கன்னத்தில் அறைந்த பாண்டியராஜனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சாமளாபுரத்தில் தற்போது உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close