தமிழக ஆளுநருடன் திமுகவினர் இன்று சந்திப்பு

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தற்போது மும்பையில் இருக்கிறார். இந்நிலையில், ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை தொடர்பாக ஆளுநரிடம் முறையிடுவதற்காக திமுகவின் முக்கிய நிர்வாகிகள் இன்று அவரை சந்திக்கவுள்ளனர். இதற்காக, திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் நேற்று மாலை மும்பை புறப்பட்டுச் சென்றனர். இவர்கள் இன்று காலை 11 மணியளவில் ஆளுனரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது, விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையின் போது, ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடத்தப்பட்டதற்கான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளதால், தமிழக அமைச்சரவையில் இருந்து அவரை நீக்க வேண்டும். டெல்லியில் கடந்த 30 நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஆளுநரிடம் திமுகவினர் முன் வைக்கவுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close