"அண்ணா மேம்பாலம் முழுப் பாதுகாப்புடன் உள்ளது"

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார், " அண்ணாசாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்திற்கு, மண்ணின் தன்மையை சரியாக ஆராயாததே காரணம் என சொல்லப்படுகிறது. இது முற்றிலும் தவறான கருத்தாகும். மெட்ரோ சுரங்கப் பாதைப் பணிகளால் அண்ணா மேம்பாலத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அண்ணா மேம்பாலம் முழுப் பாதுகாப்புடன் உறுதியாக இருக்கிறது. நேருபூங்கா - சென்ட்ரல் - வண்ணாரப்பேட்டை - சின்னமலை இடையேயான சுரங்கப் பாதைப் பணிகள் விரைவில் முடிக்கப்படும். 2017 இறுதிக்குள் மெட்ரோ ரயில் சேவைகள் முழுவதுமாக மக்கள் உபயோகத்திற்கு வந்துவிடும்" எனத் தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close