மீண்டும் இளைஞர்கள் நெடுவாசலில் போராட்டம்

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தொடங்குவதற்கான பணிகள் மத்திய அரசின் கீழ் நடைபெற்று வந்தது. இதை எதிர்த்து கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்ந்து 22 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக அரசின் உத்திரவாதத்தை ஏற்று அவர்கள் போராட்டத்ததை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். இந்நிலையில் இன்று காலை திடீரென 20 இளைஞர்கள் ஒன்று கூடி போராட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். "தமிழக மற்றும் மத்திய அரசு எங்களை ஏமாற்றப் பார்க்கிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான பணிகளை மும்மூரமாக மத்திய அரசு மேற்கொள்கிறதே தவிர, நிறுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளவில்லை. அவர்கள் திட்டத்தை கைவிடும் வரை எங்கள் போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை" என அவர்கள் தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் போராட்டத்திற்கு கிராம மக்கள் தங்கள் ஆதரவினை வழங்க ஆரம்பித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close