வருமான வரித்துறை அலுவலத்தில் கீதாலட்சுமி ஆஜர்

  gobinath   | Last Modified : 12 Apr, 2017 11:06 am
கடந்த 7ஆம் தேதி எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் அடிப்படையில், அவர் கடந்த திங்களன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பப் பட்டது. ஆயினும், அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராகாத கீதாலட்சுமி, வருமான வரித்துறை சார்பாக அனுப்பப்பட்ட சம்மனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அதில், தனக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இதனை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், வருமான வரித்துறையின் சம்மனுக்கு தடை விதிக்க முடியாது என மறுத்துவிட்டது. இதன் காரணமாக, இன்றைய தினம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு பிரிவில், விசாரணைக்காக கீதாலட்சுமி ஆஜராகியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close