விருதுநகரில் புதிதாக அரசு பல் மருத்துவக் கல்லூரி துவங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று உத்தரவு பிறப்பித்தார். தென்தமிழக மாணவர்கள் அதிக அளவில் பல் மருத்துவம் பயில வழிவகை செய்யும் விதமாக 50 கோடி ரூபாய் செலவில் இந்த கல்லூரி அமைக்கப்பட உள்ளது. பூர்வாங்க பணிகளை துவங்கி, கல்லூரி முதல்வர் பணியினை உருவாக்க முதலமைச்சர் உத்தரவு. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி பல் மருத்துவக் கல்லூரி துவங்கப்படுவதாக கூறிய பழனிச்சாமி, முதல் கட்டமாக 100 மாணவர்கள் கல்லூரியில் சேர்க்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.