பெண் தாக்கப்பட்ட விவகாரம்: விசாரணை ஆரம்பம்

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில், புதிதாகத் திறக்கப்படவிருந்த டாஸ்மாக் கடைக்கு எதிராக பெண்கள் உட்பட சுமார் 100 பேர் போராட்டம் நடத்தியிருந்தனர். அப்போது, பாதுகாப்பு கடமைக்களுக்காக அங்கு வந்த திருப்பூர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன் தலைமையிலான போலீசார், போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடித் தாக்குதல் நடத்தியது. அத்துடன், சாலையில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரை பாண்டியராஜன் மிக வேகமாகத் தாக்கினார். இந்தக் காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நிலையில், அனைவரது கண்டனத்துக்கும் ஆளானார் பாண்டியராஜன். இந்த நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி பாரி ஆய்வுகளை மேற்கொண்டார். அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close