திருமங்கலம் - நேரு பூங்கா மெட்ரோ சேவை : மே மாதம் ஆரம்பம்

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மெட்ரோ ரயில் சேவையில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2012–ம் ஆண்டு நேரு பூங்காவில் தொடங்கியது. தற்போது இந்தப் பணிகள் யாவும் முடிவடைந்த நிலையில், சுரங்கப் பாதைப் பணிகளை மெட்ரோ ரயில்பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனேகரன் தன்னுடைய நேற்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், " 2 நாட்கள் இங்கு ஆய்வுகளை மேற்கொள்வோம். பயணிகளின் பாதுகாப்பை மையமாக கொண்டு தான் எங்கள் ஆய்வு இருக்கும். ஆய்வு முடித்த பின்னர், பணிகளில் சில மாற்றங்கள் இருந்தால் அவற்றை சரி செய்த பின்னர், சான்றிதழ் வழங்கப்படும். அதனடிப்படையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் ரெயில் இயக்கப்படும் நாள் முடிவு செய்யப்படும். எப்படியும் மே மாதம் ரெயில் இயக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன" எனத் தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close