ஆர்.கே நகர் தேர்தல் ரத்து: திமுக கண்டனப் பொதுக்கூட்டம்

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சென்னை ஆர்.கே நகர் தேர்தல் ரத்தானதற்கு அதிமுக அமைச்சர்களே காரணம் என குற்றம் சாட்டி வரும் திமுக, அவர்களுக்கு எதிராக கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்றை நேற்று நடத்தியது. அதில் பேசிய தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், " தேர்தலை நடத்துவதற்கு சகல அதிகாரங்களையும் படைத்த தேர்தல் ஆணையம் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தும் இடைத்தேர்தலை நடத்தமுடியவில்லை. "பெரா" அணி, "மணல் மாபியா சேகர் ரெட்டி ஓ.பி.எஸ் அணி" என்று பிரிந்து இருந்தாலும், இரு அணிகளும் ஓரணியாக இருந்து ஊழல் செய்தவர்கள். 89 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்து, தேர்தலை நடத்த விடாமல் தடுத்த முதலமைச்சர், அமைச்சர்களை உடனடியாக நீக்க வேண்டும். அதிமுக ஆட்சியின் கடந்த ஐந்து வருடம், இந்த முறை ஒரு வருடம் அதிமுக ஆட்சி நடத்திய காலகட்டங்களில் நடைபெற்ற ஊழல்களை விசாரிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்."

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close