இன்று அதிகாலை துபாயில் இருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு 164 பயணிகளுடன் வந்த விமானம் ஒன்று ஓடு பாதையில் தரையிறங்கும் போது பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. விமானத்தின் சக்கரங்கள் செயல்படவில்லை என்பதை உணர்ந்த விமானி சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கினார். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். விமானத்தில் இருந்து உண்டான சத்தத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.