இயக்குனர் கவுதமன் கைது: போக்குவரத்து சீரானது

  gobinath   | Last Modified : 13 Apr, 2017 10:13 am
சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இன்று காலை திடீரென இயக்குனர் கவுதமன் தலைமையில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கத்திப்பாரா மேம்பாலத்தில், விமான நிலையத்திற்கு செல்லும் வழியை சங்கிலியால் கட்டி, அதற்குப் பூட்டுப் போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, அங்கு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டக் காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆயினும், அதில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். பின்னர், அவர்களை வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர். இதனை அடுத்து, சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்ட கத்திப்பாரா மேம்பாலப் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தமிழக விவசாயிகள் போராடி வரும் நிலையில், அவர்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை எனக் கூறி, விவசாயிகளுக்கு ஆதரவாகவே இந்த சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close