மதுக்கடைகளுக்கு எதிராக பாஜக போராட்டம் - தமிழிசை

  mayuran   | Last Modified : 13 Apr, 2017 10:42 am
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் மதுபான கடைகளை மூடக்கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில், பொதுமக்கள் தாக்கப்பட்டமைக்கு பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது, தாக்குதல் நடத்திய போலீஸ் அதிகாரி பாண்டியராஜனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். "இனி மதுக்கடைகளை திறக்க முடியாத அளவிற்கு பா.ஜனதா மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close