நாமக்கல்லில் மழை நீடிப்பு - மக்கள் மகிழ்ச்சி

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தமிழகம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நேற்று சூறைக்காற்றுடன் அரை மணிநேரம் மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலையிலும் ஒரு மணி நேரம் மழை பெய்துள்ளதால் வெப்பம் கணிசமாக குறைந்துள்ளது. வெப்பத்தின் பாதிப்பால் பகல் வேளைகளில் அவதிப்பட்டு வந்த மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிணறுகள், குட்டைகள், ஏரிகள் வறண்டு கிடந்த நிலையில், தற்போது நீர்பிடிப்பு அதிகமாகியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்கள் மழை பெய்தால் குடிநீர் தட்டுப்பாடு குறையும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close