நீண்ட நாள் காதலரை மணந்தார் இரோம் சர்மிளா

Last Modified : 17 Aug, 2017 11:36 am

சமூக போராளியான இரோம் சர்மிளாவுக்கு இன்று கொடைக்கானலில் திருமணம் நடந்தது. தனது நீண்ட நாள் காதலர் தேஸ்மந்த் கொட்டின்கோவை சர்மிளா திருமணம் செய்துள்ளார். மணிப்பூரில் அமலில் உள்ள சிறப்பு ராணுவ அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெற கோரி 16 ஆண்டு காலம் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர் சர்மிளா. தற்போது தனது காதலருடன் கொடைக்கானலில் வசித்து வரும் அவர், கடந்த மாதம் 12-ஆம் தேதி திருமணம் செய்து கொள்வதற்காக கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருந்தார். இவரது திருமணத்தை கொடைக்கானலில் நடத்தக் கூடாது என இந்து மக்கள் கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரத்த சொந்தங்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் திருமணத்திற்கு தடை விதிக்க முடியாது என சார் பதிவாளர் மறுத்து விட்டார். கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து இரோம் சர்மிளாவின் திருமணம் இன்று நடைபெற்றது. இதில் அவரது குடும்பத்தார் யாரும் கலந்து கொள்ளவில்லை. கக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி மணப்பெண் தோழியாக திருமணத்தில் கலந்து கொண்டார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.