• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

கேரளாவில் உயிரிழந்த முருகன் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் நிதியுதவி

Last Modified : 17 Aug, 2017 12:09 pm

கேரளாவில் சிகிச்சை அளிக்க மறுத்து உயிரிழந்த நெல்லையைச் சேர்ந்த முருகன் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் கேரளாவில் நடத்த விபத்து ஒன்றில் திருநெல்வேலியைச் சேர்ந்த முருகன் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் கேரள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்து விட்டனர். இதனால் முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, நடந்த நிகழ்வுக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். மேலும், மரணமடைந்த முருகன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார். இந்நிலையில், தமிழக அரசு முருகன் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க வேண்டும் எனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன. தமிழக அரசு ஒரு வாரமாக இதை கண்டு கொள்ளாத நிலையில், தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முருகன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், காயமடைந்த முத்து என்பவருக்கு ரூ.50,000 நிதியுதவி அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Advertisement:
[X] Close