• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத்தடை : உச்சநீதிமன்றம்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

இந்த ஆண்டு தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத்தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவிக்கும் மாணவர்கள் சார்பாக, நளினி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று காலை நடைபெற்ற விசாரணையில், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு விலக்களிக்க கூடாது, மருத்துவ கலந்தாய்வு நடத்த கூடுதல் அவகாசம் வழங்கக்கூடாது என இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் வாதம் செய்யப்பட்டது. இது குறித்து பிற்பகல் நடைபெறும் விசாரணையில் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது நடந்த வாதத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். அவரது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சட்டச்சிக்கல்கள் ஏதும் இல்லை என்பதால் அவசர சட்டத்தை தடை செய்ய முடியாது என கூறி, தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது. மேலும், நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்களின் அனைத்து விபரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. எந்த மாணவரும் பாதிக்கப்படாத வகையில் அவசர சட்டம் இருக்க வேண்டும் எனவும் கூறி, வழக்கை ஆகஸ்ட் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

Advertisement:
[X] Close