• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

அதிமுக ஒன்று சேர ரூட் க்ளியர்... ஓபிஎஸ் ஆலோசனை

  shriram   | Last Modified : 17 Aug, 2017 08:41 pm

கடந்த சில மாதங்களாக, அதிமுக அம்மா, புரட்சித்தலைவி அம்மா என இரண்டு அணிகளாக பிரிந்து கிடைக்கும் அதிமுக, ஒன்று சேருமா, சேராதா, என்பது தான் தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் விமர்சகர்களின் கேள்வி. ஆனால் தற்போது அந்த கேள்விக்கான விடை தெரியும் நாள் அருகே வந்துவிட்டது போல தெரிகிறது. ஒன்று சேர, ஓபிஎஸ் அணி போட்ட முக்கியமான கண்டிஷன்கள், சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து முற்றிலும் நீக்குவது, ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை, என்பது தான். தினகரனை கட்சியை விட்டு நீக்கியதை தொடர்ந்து, இன்று அதிரடியாக ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி நியமிக்கப்படுவார் என முதல்வர் எடப்பாடி தெரிவித்தார். இந்நிலையில், நாளை ஓபிஎஸ் அணி ஆலோசனை கூட்டம் நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இரு அணிகளும் சேரும் நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என கட்சி வட்டாரங்களில் சிலர் கூறுகின்றனர். ஆனால், தினகரன் அணியை சேர்ந்தவர்கள், அது நிச்சயம் நடக்காது, என மறுத்து வருகின்றனர். இரு அணிகள் சேர முக்கிய தடையாக இருப்பது முதல்வர் 'சீட்' தான். எடப்பாடியோ, ஓபிஎஸ்ஸோ... அதை விட்டுக்கொடுக்க தயாராக இருப்பார்களா என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம்..

Advertisement:
[X] Close