போயஸ் தோட்ட இல்லத்தில் எனக்கு உரிமை உண்டு: தீபா

  shriram   | Last Modified : 17 Aug, 2017 10:56 pm

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தின் மீது, சசிகலாவும், ஜெயலலிதாவின் அண்ணன் குடும்பமும் உரிமை கொண்டாடி வந்தனர். இந்நிலையில், இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அந்த போயஸ் தோட்ட இல்லம் ஜெயலலிதாவின் நினைவு மண்டபமாக மாற்றப்படும் என அறிவித்தார். இதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகள், மற்றும் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தலைவருமான தீபா, அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனக்கும் தனது சகோதரர் தீபக்குக்கும் அந்த இல்லத்தில் உரிமை இருப்பதாக கூறிய அவர், தங்கள் ஒப்புதல் இல்லாமல் அதை மணிமண்டபமாக மாற்ற அரசுக்கு உரிமை இல்லை என்று கூறியுள்ளார்.

Advertisement:
[X] Close