• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

தீண்டாமை சுவர்; நீதிமன்றம் புதிய கருத்து

Last Modified : 01 Jan, 1970 05:30 am

தாழ்த்தப்பட்ட இரு சமூகங்களுக்கு இடையே கட்டப்பட்ட தடுப்புச் சுவர் தீண்டாமை சுவராகாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த குருசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்திருந்த வழக்கில், தங்கள் கிராமத்தில் இரண்டு சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்கு நடுவே தீண்டாமை சுவர் எழுப்பப்பட்டுள்ளது இதனால் கோவில், அங்கன்வாடி மையம் போன்றவற்றிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த தீண்டாமை சுவரை இடிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது இரண்டு சமூக மக்களுமே பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, பட்டியல் இனத்தில் வரும் இரண்டு சமூக மக்கள் இடையே கட்டப்பட்ட சுவர் தீண்டாமை சுவராகாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கை அந்த கோணத்தில் விசாரிக்க முடியாது. ஏற்கனவே இது போன்ற ஒரு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி அரசு தரப்பு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை வரும் 21-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Advertisement:
[X] Close