ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Last Modified : 01 Jan, 1970 05:30 am

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நல்ல மழைப்பொழிவு காணப்படுகிறது. இதனால் ஆறுகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றங்கரையை ஒட்டியுள்ள 5 மாவட்டங்களுக்கு பொதுப் பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.பி அணைக்கு வரும் நீரின் வரத்து 2,648 கனஅடியாக உயர்ந்துள்ளது. கரையோர பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆற்றை கடக்க மக்கள் யாரும் முயற்சிக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. 48.77 கனஅடியில் இருந்து 50.83 கனஅடியாக நீரின் அளவு உயர்ந்துள்ளது. இதேபோல் அணைக்கான நீர்வரத்து 12,973 கனஅடியில் இருந்து 21,947 கனஅடியாக அதிகரித்துள்ளது. தற்போது அணையில் நீரின் இருப்பு நிலை 18.33 டி.எம்.சி-யாகவும், நீர் வெளியேற்றம் 700 கனஅடியாகவும் உள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.