• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

வேதா இல்லம் : சர்ச்சையை கிளப்பிய தீபக்கின் கடிதம்

Last Modified : 18 Aug, 2017 12:40 pm

ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், முதல்வருக்கு எழுதிய கடிதம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று இரண்டு முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார். அதன்படி, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்காக குழு அமைக்கப்படும். ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் "வேதா இல்லம்" அவரது நினைவிடமாக மாற்றப்படும் என அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், "வேதா நிலையம் வீடு எனக்கும் எனது சகோதரி தீபாவுக்கும் சொந்தமானது. எங்களுடைய அனுமதி இல்லாமல் அதை நினைவிடமாக மாற்ற முடியாது. போயஸ் கார்டன் இல்லத்தை ஜெயலலிதா யாருக்கும் எழுதி வைக்கவில்லை. அதே நேரத்தில் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது வரவேற்கத்தக்கது. ஆனால் அதனை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. அதே நேரத்தில் நினைவிடமாக்குவதற்கு முன் சட்டப்படி எங்களிடம் கருத்து கேட்க வேண்டும் " என தெரிவித்திருந்தார். தீபக் எழுதிய கடிதத்தில் முதலில் 9ஆம் தேதி என்று அச்சிடப்பட்டிருந்தது. பின்னர், அது 16ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளது. அனால் நேற்று (17ம் தேதி) தான் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் முதல்வரின் அறிவிப்பை முன்கூட்டியே தீபக் தெரிந்து இந்த கடிதத்தை எழுதி வைத்துள்ளாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

Advertisement:
[X] Close