• வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

அரசு பள்ளி ஆசிரியர்களை கட்டாயப்படுத்த முடியாது

Last Modified : 01 Jan, 1970 05:30 am

அரசு பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கருணாகரன் எழுப்பியிருந்த கேள்விக்கு இன்று தனது பதில் மனுவை தாக்கல் செய்த தமிழக அரசு இவ்வாறு கூறியுள்ளது. பதில் மனுவில், "அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என உயர்நீதிமன்றம் எதிர்பார்ப்பது நியாயம் தான். ஆனால் ஆசிரியர்களுக்கு தானாக மனமாற்றம் ஏற்பட்டால் மட்டுமே அது சாத்தியமாகும். குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க சொல்லி அவர்களை கட்டாயப்படுத்த முடியாது. பெற்றோர் என்ற முறையில் தங்கள் குழந்தைகளை எந்த பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதை முடிவு செய்ய ஆசிரியர்களுக்கு உரிமை உண்டு. தற்போதும் கூட சில ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து வருகின்றனர். தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகை பதிவு பெரம்பலூர் பள்ளியில் முதல் முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக 4.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளது.

Advertisement:
[X] Close