ஓபிஎஸ்க்கு துணை முதல்வர் பதவி - இபிஎஸ் அணி திட்டம்

Last Modified : 18 Aug, 2017 01:13 pm

அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு பற்றி பல்வேறு கேள்விகள் இருந்த நிலையில், தற்போது அதற்கான நடவடிக்கையை இபிஎஸ் அணி எடுத்துள்ளது. இன்று நடந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, பன்னீர் செல்வத்திற்கு துணை முதல்வர் பதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நிதித்துறை, பொதுப்பணித்துறை ஆகியவை ஓபிஎஸ் அணி சார்பில் கேட்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக கூறிய இபிஎஸ், நிதித்துறை கொடுப்பதற்கு சம்மதம் தெரிவிப்பதாகவும், ஆனால் பொதுத்துறைக்கு பதிலாக, மற்றொரு துறை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, கட்சியை வழி நடத்துவதற்காக அமைக்கப்படும் குழுவில் 9 பேர் இருப்பர். குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இருப்பர். மீதமுள்ள 7 பேரில் 3 பேர் பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்தவர்களாகவும், 4 பேர் பழனிசாமி அணியைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பர் என்றும் ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 31 அமைச்சர்களை முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு கீழ் தனித்தனியாக பிரித்து கொடுக்கவும் பேச்சு வார்த்தை நடந்தது. ஆனால் இது எந்த அளவுக்கு சத்தியம் என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம். இன்று மாலை அதிமுக அலுவலகத்தில் இரு அணிகள் இணைப்புக்கான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், இரு அணிகளை சேர்ந்தவர்களும் கலந்து கொள்கின்றனர்.

Advertisement:
[X] Close