ஜீவசமாதி : முதல்வருக்கு ராஜீவ் கொலை குற்றவாளி முருகன் கடிதம்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் கொலை குற்றவாளி முருகன் ஜீவசமாதி அடைய அனுமதி கோரி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதி உள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை வாசம் அனுபவித்து வருகிறார் முருகன். இந்நிலையில் சிறை வாழ்க்கை வெறுத்து விட்டதாகவும், தான் ஜீவசமாதி அடையப்போவதாகவும் கடந்த மாதம் அறிவித்திருந்தார். இதற்காக கடந்த மாதம் 17-ஆம் தேதி முதல் ஒருவேளை மட்டும் உணவு அருந்தி வந்தார். இன்று ஜீவசமாதி அடையப்போவதாக அவர் அறிவித்திருந்த நிலையில், அதற்கு அனுமதி வழங்க கோரி தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளார். மேலும், இன்று முதல் வடக்கு நோக்கி உண்ணாநோன்பு இருக்க போவதாவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து முருகனுடன் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
[X] Close