• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யலாமே? உச்சநீதிமன்றம் கேள்வி

Last Modified : 18 Aug, 2017 01:39 pm

கார்த்தி சிதம்பரத்தை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் வரும் 23ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா அந்நிய செலவாணி மோசடி தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ, லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனையடுத்து கார்த்தி, தன் மீதான லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்யக்கோரி கடந்த 10ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தது. இதையடுத்து சிபிஐ சார்பில் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத்தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது. மேலும் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும் படியும் கார்த்திக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கார்த்தி சிதம்பரம் சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கின் இன்றைய விசாரணையில், அவரது கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து, டெல்லி சிபிஐ அலுவலகத்தில் வரும் 23ம் தேதி ஆஜராகும் படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கார்த்தி மீதான லுக் அவுட் நோட்டீசுக்கு தடையில்லை என மீண்டும் கூறியுள்ளது. மேலும் தேவையான ஆதாரங்கள் சரியாக இருந்தால் அவரை கைது செய்யலாமே? என கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்த சிபிஐ, ஆதாரங்கள் இருந்தாலும் விசாரணை முடிந்த பிறகே நடவடிக்கை எடுக்க முடியும் என கூறியுள்ளது.

Advertisement:
[X] Close