• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

'காபி வித் கலெக்டர்': மாணவர்களுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

Last Modified : 18 Aug, 2017 04:09 pm

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் அம்மாவட்டத்தில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுடன் ஒரு புதுமையான கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துதல், அவர்களின் தன்னம்பிக்கை, பொது வாழ்வில் ஈடுபாடு, புரிந்துக் கொள்ளும் திறன் போன்றவற்றை தெரிந்துக் கொள்ளும் பொருட்டு, "காபி வித் கலெக்டர்" என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஆட்சியர் வெங்கடேஷ், மாணவ, மாணவிகளுக்கு தேவையான அறிவுரைகளையும், சந்தேகங்களையும் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது, "மாணவ, மாணவிகளின் பங்களிப்பு நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகும். மாணவர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்வதில், என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை அறிந்துக் கொண்டு, அதற்கு தீர்வு காணவே இந்த உரையாடல் நிகழ்ச்சி நடந்தது" என்றார். முன்னதாக திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, "கால் யுவர் கலெக்டர்" என்ற திட்டத்தை தொடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
[X] Close