• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

நடிகை கடத்தல் விவகாரம் : ரம்யா நம்பீசனிடம் விசாரணை

Last Modified : 18 Aug, 2017 09:58 pm

'கடத்தப்பட்ட நடிகைக்கு அடைக்கலம் கொடுத்ததால், கடத்தல் கும்பல் பற்றி தெரிந்திருக்கலாம்' என்ற கோணத்தில் நடிகை ரம்யா நம்பீசனிடம், போலீசார் விசாரணை நடத்தினர். ஓடும் காரில் பிரபல நடிகை கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரமும் செய்யப்பட்டதாக சொல்லப்படும் வழக்கில் மலையாள நடிகர் திலீப், ரவுடி பல்சர் சுனில் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்ந்து போலீசார் பலரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தபோது அந்த காட்சியை படம் பிடித்த செல்போனை போலீசாரால் இன்னும் கைப்பற்ற முடியவில்லை. இந்த வழக்கில் அந்த செல்போன் முக்கிய சாட்சியம் என்பதால் அதை பறிமுதல் செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்த வழக்கில் ஏற்கனவே திலீப்பின் முதல் மனைவி நடிகை மஞ்சுவாரியர், 2-வது மனைவி நடிகை காவ்யா மாதவன், அவரது தாயார் மற்றும் மலையாள திரையுலகை சேர்ந்தவர்கள், கேரள அரசியல்வாதிகள் என்று போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் வந்து உள்ளவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த நிலையில், தமிழ்- மலையாள மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை ரம்யா நம்பீசனும், போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார். ஆலுவாவில் உள்ள போலீஸ் கிளப்பிற்கு அவரை வரவழைத்து நேற்று போலீசார் விசாரணை நடத்தினார்கள். ரம்யா நம்பீசனும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நடிகையும் நெருங்கிய தோழிகள் ஆவார்கள். மேலும் சம்பவம் நடந்த அன்று சினிமா படப்பிடிப்பு முடிந்து ரம்யா நம்பீசன் வீட்டிற்கு தான் அந்த நடிகை காரில் சென்று கொண்டிருந்தார். ரவுடி கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு சில நாட்கள் ரம்யா நம்பீசன் வீட்டில்தான் அந்த நடிகை தங்கினார். எனவே அப்போது அந்த நடிகை, தன்னை கொடுமைக்கு ஆளாக்கியவர்கள் பற்றிய தகவல்களை ரம்யா நம்பீசனிடம் தெரிவித்திருப்பார் என்ற கோணத்தில், ரம்யா நம்பீசனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். 2 மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை அவர் போலீசாரிடம் தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

Advertisement:
[X] Close