ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைந்து ஜெ. சமாதி செல்கின்றனர்!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 18 Aug, 2017 06:53 pm

சிறை சென்று திரும்பி தினகரன் கட்சிப் பணியில் தீவிரமாக இறங்க ஆரம்பித்ததும் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை வேகம் எடுத்தது. இரு அணிகளும் சசிகலா, தினகரனை ஒதுக்குவதில் தீவிரமாக உள்ளன. இந்தநிலையில், கட்சி, ஆட்சியை யார் நிர்வகிப்பது என்ற சர்ச்சை காரணமாக அணிகள் இணைப்பு தாமதமாகி வருகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) தமிழக அமைச்சர்கள் இரண்டு பேர் ஓ.பி.எஸ்-ஐ சந்தித்து பேசினர். இதைத் தொடர்ந்து தற்போது ஓ.பி.எஸ் அணி ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. இது முடிந்ததும், முதலமைச்சர் பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், ஜெயலலிதா நினைவிடத்திற்கு இரவு 7.30 மணிக்கு சென்று அஞ்சலி செலுத்துகின்றனர். இதைத் தொடர்ந்து இணைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதையொட்டி ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கட்சியைக் காப்பாற்ற அறுவைசிகிச்சைக்குத் தயார் என்று தினகரன் தெரிவித்துள்ளார். இதனால், என்ன ஆகும் என்ற பரபரப்பு தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஓ.பி.எஸ் - தீபா "எதிர்பாராத விதமாக" ஜெயலலிதா சமாதியில் சந்தித்துக்கொண்டனர். அதன்பிறகு, ஓ.பி.எஸ் வீட்டுக்கு தீபா சென்றார். அங்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இரு அணிகளும் இணைந்து செயல்படப் போவதாக பேச்சுக்கள் எழுந்தது. அடுத்தநாளே இருவருக்கும் யார் பெரியவர் என்ற ஈகோ ஏற்பட்டது. இதனால், இருவரும் தனித்தனியாக பிரிந்து அரசியலில் பயணிப்பது குறிப்பிடத்தக்கது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.