கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகம்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

இந்திய அளவில் கல்வித்துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதாக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நேற்று பிளஸ் 1 வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாளை அறிமுகப்படுத்தி பேசிய போது இதனை அவர் தெரிவித்தார். செங்கோட்டையன், மத்திய அரசின் பொதுத்தேர்வுகளை எதிர்க்கொள்ளும் வகையில் மாணவர்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். கழிப்பிட வசதி, கட்டமைப்பு, சிறந்த கல்வி ஆகியவற்றின் அடிப்படையில் கல்வித்துறையில் சிறந்து விளங்கும் 3 மாநிலங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. இதில் தமிழகமும் ஒன்றாகும். 54 ஆயிரம் கேள்வி - பதில் அடங்கிய 30 மணி நேரம் ஓடக்கூடிய பொது நுழைவுத்தேர்வு சி.டி தயாராகி வருகிறது. கல்வி உயர்மட்ட குழு பார்வையிட்ட பின்னர், இது மாணவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார். நேற்று நடைபெற்ற வினாத்தாள் அறிமுக நிகழ்ச்சியில் கல்வித்துறை முதன்மை செயலர் உதயச்சந்திரன் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.