• திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்
  • பகத் சிங் பிறந்தநாளை கொண்டாடிய மாணவி சஸ்பெஸ்ட்!

சென்னை வருகிறார் பாஜக தலைவர் அமித் ஷா

Last Modified : 19 Aug, 2017 10:02 am

பாஜக தலைவர் அமித் ஷா வரும் 22-ஆம் தேதி சென்னை வர உள்ளார். கடந்த மே மாதம் முதல் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அவர், வரும் 22,23,24 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். 22-ஆம் தேதி காலை 10 மணி அளவில் சென்னை வரும் அமித் ஷா, சென்னை துறைமுக விருந்தினர் மாளிகையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் நட்பு அமைப்புகளின் நிர்வாகிகளுடன் சந்திப்பு நடத்துகிறார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது. இதன் பின்னர் நடுக்குப்பத்தில் நடைபெறும் கட்சி கிளை கமிட்டி கூட்டத்திலும் பங்கு கொள்கிறார். விவேகானந்தர் இல்லத்தை பார்வையிடும் அவர், பத்திரிகையாளர்களுடன் லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் சந்திப்பு நடத்த உள்ளார். இதனிடையே கட்சி நிர்வாக பணிகள், கூட்டங்கள் சிலவற்றிலும் கலந்து கொள்ள உள்ளார். பின்னர் 24-ஆம் தேதி கோவை செல்லும் அவர் தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் தென் தமிழக பாஜக நிர்வாகிகள் ஆகியோருடன் சந்திப்பு நடத்துகிறார். பின்னர் அன்று மாலையே விமானம் மூலம் அவர் டெல்லி செல்கிறார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close