• வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

கொடநாடு எஸ்டேட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

Last Modified : 19 Aug, 2017 12:31 pm

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கண்காணிப்பு கேமராக்கள் தற்போது பொருத்தப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் இந்த பங்களாவில் காவலாளியாக வேலை பார்த்து வந்த ஓம் பகதூர் என்பவர் பங்களாவுக்கு அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். மற்றொரு காவலாளி படுகாயத்துடன் மீட்கப்பட்டார். பங்களாவில் இருந்த முக்கிய ஆவணங்களை திருட முயற்சிக்கும் போதே கொலை நடைபெற்றதாக கூறப்பட்டது. இதனை அடுத்து காவலாளியை கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டிய நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட இருந்த நிலையில் மர்மமான முறையில் அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனிடையே கொடநாடு கொலை வழக்கு குறித்து விசாரிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனி விசாரணை கமிஷன் ஒன்றை அமைத்தார். மேலும், பாதுகாப்பிற்காக கொடநாடு பங்களாவை சுற்றிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார். அதன் பேரில் தற்போது கொடநாடு பங்களாவை சுற்றிலும் 7 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Advertisement:
[X] Close