• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் துவக்கம்

Last Modified : 19 Aug, 2017 03:14 pm

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் பணிகள் இன்று துவங்கின. நேற்று முன் தினம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு மிக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்படும். ஜெயலலிதா வசித்து போயஸ் கார்டன் இல்லம் அவரது நினைவு இல்லமாக மாற்றப்படும் என தெரிவித்திருந்தார். அதன் பேரில் இன்று நினைவு இல்ல மாற்றத்திற்கான பணிகளை அரசு அதிகாரிகள் துவங்கி உள்ளனர். முதற்கட்டமாக வருவாய் துறை அதிகாரிகள் இல்லத்தை அளவிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் இந்த இல்லத்தில் அவரது தோழியான சசிகலா வசித்து வந்தார். சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றதையடுத்து, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வேதா நிலையம் இல்லத்தை பராமரித்து வருகிறார்.

Advertisement:
[X] Close