• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

அணி இணைப்பு; ஓரிரு தினங்களில் முடிவு தெரியும் ; ஓபிஎஸ் அறிவிப்பு

Last Modified : 19 Aug, 2017 03:13 pm

இன்னும் ஓரிரு தினங்களில் அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்த முடிவு தெரிய வரும் என அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி தலைவர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக கட்சி இரண்டாக பிரிந்தது. பின்னர் சசிகலா, தினகரன் ஆகியோர் சிறை சென்றதை தொடர்ந்து ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி என மூன்றாக மாறியது. ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகளை இணைப்பது குறித்த பேச்சு வார்த்தை சசிகலா சிறை சென்றதில் இருந்து ஆரம்பமாகி தற்போது வரை இழுத்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் இன்று அணி இணைப்பு குறித்த மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய ஓபிஎஸ், "அணி இணைப்பு குறித்த பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் அணி இணைப்பு குறித்த முடிவு தெரிவிக்கப்படும். அதிமுகவினர் இடையே கருத்து வேறுபாடு இல்லை. தொண்டர்கள் மற்றும் தமிழக மக்கள் விருப்பப்படி அணி இணைப்பு நடக்கும்" என தெரிவித்தார். அணி இணைப்பு குறித்து நீண்ட நாட்களாக அமைதி காத்து வந்த ஓபிஎஸ் தற்போது இவ்வாறு தெரிவித்து இருப்பதால் விரைவில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கலாம்.

Advertisement:
[X] Close