அணிகள் இணைப்பு முக்கிய பிரச்னையா?- சீமான்

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

நேற்று தமிழக அமைச்சர்கள் ஓ.பி.எஸ்-ஐ சந்தித்து ஆலோசனை நடத்திய பின்னர், இ.பி.எஸ் அணியுடன் இணைவது பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், இரு அணிகள் இணைவது தொடர்பில் இழுபறி ஏற்பட்டதால், அது குறித்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், இரு அணிகள் இணைப்பு அவ்வளவு முக்கிய பிரச்னையா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில் இன்று பேட்டி அளித்த அவர், அணிகள் இணைந்தால் என்ன? இணையாவிட்டால் என்ன?. மேகதாதுவில் அணை கட்டலாம் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகம் பெருமுதலாளிகளின் வேட்டைக்காடாக மாற்ற முயற்சிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
[X] Close