• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

செங்கோட்டை, நெல்லைக்கு புதிய ரயில்கள் இயக்க முடிவு

Last Modified : 19 Aug, 2017 08:05 pm

சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கும், செங்கோட்டைக்கும் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு தினமும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலும், திருநெல்வேலிக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலும் செல்கிறது. இதுதவிர, நெல்லை வழியாக கன்னியாகுமரி, அனந்தபுரி என நான்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும் தென் மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய ரயில்களில் கூட்ட நெரிசல் எப்போதுமே அதிகமாக உள்ளது. பயணிகளின் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை மற்றும் நெல்லைக்கு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயிலின் கால அட்டவணை மற்றும் இதர விவரங்கள் வரும் அக்டோபர் வெளியிடப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. வருகை, புறப்பாடு உள்பட சென்னை எழும்பூரில் இருந்து 60க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால், நெருக்கடி காரணமாக கூடுதல் ரயில்களை இயக்க முடியாத சூழ்நிலை உள்ளது. தற்போது சென்னையின் மூன்றாவது ரயில் முனையமாக தாம்பரம் மாற்றப்பட்டதை அடுத்து தாம்பரத்தில் இருந்து ரயில் புறப்படும் என்ற அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. தற்போது தாம்பரத்தில் இருந்து இரண்டு வாரந்திர விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
[X] Close