• பிரபல தனியார் டிவி சேனல் மீது அனில் அம்பானி மான நஷ்ட வழக்கு!
  • தேமுதிக பொருளாளர் ஆனார் பிரேமலதா!
  • பெண்களை அனுமதித்தால் கோவிலை மூட வேண்டும்: பந்தள மன்னர்
  • சன்னிதானம் நோக்கி சென்ற பெண்கள் ஐயப்ப பக்தர்கள் அல்ல: தேவசம் அமைச்சர் அதிரடி
  • ஐயப்ப சன்னிதானம் நோக்கி சென்ற பெண்களை திருப்பி அனுப்ப தேவசம் போர்டு உத்தரவு

சோதனைகள் வந்தால், அதை கண்டு அஞ்சப்போவதில்லை- முதலமைச்சர்

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

திருவாரூர் மாவட்டத்திலுள்ள, திருவாரூர்- தஞ்சை சாலையில் வான்மீகபுரம் அம்மா மைதானத்தில் மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா இன்று தொடங்கியது. விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவியர்களுக்கு பரிசுகளையும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார். திராவிடத்தால் உரமேற்பட்ட மண் திருவாரூர் என புகழாரம் சூட்டி முதல்வர் தனது உரையை ஆரம்பித்தார். தமிழகத்தின் மொத்த நெல் உற்பத்தியில் திருவாரூரின் பங்கு 10.7%ஆக உள்ளது. சிறிய மாவட்டமாக இருந்தாலும் சிறந்த மாவட்டமாக திருவாரூர் விளங்குகிறது. இங்கு புகழ்பெற்ற ஆழித்தேரை சீரமைத்து இயக்கியவர் ஜெயலலிதா. ஒருநாட்டின் வெற்றி தோல்வியை விவசாயிகள் தான் தீர்மானிப்பதாக எம்ஜிஆர் எண்ணினார். சாமானியர்களை சரித்திரமாக்கும் வல்லமை உடையது அதிமுக. குடிமராமத்து பணிகள் மூலம் விவசாயிகளுக்கு வண்டல் மண் கிடைக்கிறது. ரூ.300 கோடி செலவில் குடிமராமத்து மேலும் விரிவுபடுத்தப்படும். 1,019 ஏரிகளில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தாண்டு 11 கலை மற்றும் அறிவியல் அரசுக் கல்லூரிகளை திறந்துள்ளது தமிழக அரசு. இந்தியாவிலேயே கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய மாநிலம் தமிழகம் தான். ஏழை குடும்பத்தில் பிறந்த மாணவர்கள் கல்வி பயில அனைத்து வசதிகளும் உள்ளன. விவசாயிகளுக்கு தேவையான அனைத்தையும் செய்து தந்தது இந்த அரசு. மேலும், எத்தனை சோதனைகள் வந்தாலும் அதனை கண்டு அஞ்சப்போவதில்லை என்று கூறிய அவர், முனிவர், பூனை கதையை சொல்லி அதிமுகவின் தற்போதைய நிலை குறித்தும் முதலமைச்சர் பேசினார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close