• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

அணிகள் இணைப்பு விவகாரம்: ஓ.பி.எஸ், இ.பி.எஸ் சிறப்பாக நடிக்கின்றனர் - ஸ்டாலின் பேட்டி

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

லண்டனில் இருந்து சென்னை திரும்பிய தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "கர்நாடக அரசு மேகதாது அணைகட்ட உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒப்புதல் அளித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது சட்டப்படி தவறு. தமிழக அரசு இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க சிபிஐ விசாரணை கோரிய பன்னீர்செல்வம் தமிழக அளவிலான விசாரணையை ஏற்றுக் கொண்டிருப்பதால், தனக்கு கமிஷன் கொடுத்தால் போதும் என்பதை ஒத்துக் கொள்வாரா? அ.தி.மு.க அணிகள் இணைப்பு என்பது ஒரு மிகப்பெரிய நாடகம். டெல்லியில் இருந்து கதை, திரைக்கதை, இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப ஓ.பி.எஸ், இ.பி.எஸ் சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்றார்.

Advertisement:
[X] Close