• திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்
  • பகத் சிங் பிறந்தநாளை கொண்டாடிய மாணவி சஸ்பெஸ்ட்!

'சூரிய' குடும்பத்தின் ஆட்சி மீண்டும் வர கூடாது - ஜெயக்குமார் காட்டம்

Last Modified : 20 Aug, 2017 07:52 am

எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா சென்னை, செங்குன்றம் அடுத்த சோழவரத்தில், செப்டம்பர் 2ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் பாடியநல்லுாரில் நடந்தது. இதில், தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது: "அ.தி.மு.க., இரும்பு கோட்டை; அதில், தகுதியில்லாத எவனும் நுழைய முடியாது. தமிழகத்தை கொள்ளை அடித்த ஒரு இயக்கம், மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறது. அதேபோன்று, தியாகமே செய்யாத ஒரு குடும்பம், தமிழகத்தை சூறையாட முயற்சிக்கிறது; அதை, நாம் அனுமதிக்கக் கூடாது. தமிழகத்தை கொள்ளை அடித்த சூரிய குடும்பத்திற்கு, தியாகமே செய்யாத குடும்பம், ஆதரவு அளிக்க தயாராகிவிட்டது. தலைக்கு, 500 ரூபாய் கொடுத்தால், தலைவனாகி விட முடியுமா?" இவ்வாறு, தினகரனையும், திமுகவையும் பெயர் குறிப்பிடாமல் ஆவேசமாக பேசினார். இந்த கூட்டத்தில், ஜெயகுமாருடன், அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன், பெஞ்சமின் ஆகியோரும் பங்கேற்றனர்

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close