• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக்க முடியுமா?

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 20 Aug, 2017 11:37 am

எடப்பாடி அறிவித்தபடி ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவிடமாக அறிவிப்பதில் பல்வேறு சிக்கல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அ.தி.மு.க மிகப்பெரிய தடுமாற்றத்தில் இருக்கிறது. கட்சி இரண்டாக உடைந்து, இப்போது மூன்றாக உள்ளது. ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி அணி இணைப்புக்கான பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. அ.தி.மு.க அணிகள் இணைய வேண்டும் என்றால் ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற வேண்டும், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாகச் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணி வலியுறுத்தியது. இதைத் தொடர்ந்து கடந்த வாரம், எடப்பாடி இரண்டு அறிவிப்புக்களை வெளியிட்டார். அதில் முதலாவது ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது பற்றியது. இரண்டாவதாக, ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கேட்டது சி.பி.ஐ விசாரணை... கிடைத்ததோ ஒப்புக்கு ஒரு விசாரணை. இதில் திருப்தி அடைந்த ஓ.பி.எஸ் அணியினர் பதவி கிடைத்தால் போதும் என்ற அடிப்படையில் இப்போது இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்ற எதிர்க்கட்சிகள் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா யாருக்கு அந்த வீட்டை எழுதி வைத்துள்ளார் என்பது இதுவரை தெரியவில்லை. ஜெயலலிதாவின் விருப்பத்தை மீறி அந்த வீட்டை அரசு கைப்பற்றி நினைவிடமாக்க முடியுமா என்பது தெரியவில்லை. அதேநேரத்தில், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று, மரணம் அடைந்ததால் இறுதித் தீர்ப்பில் இருந்து தப்பிய ஜெயலலிதாவுக்கு நினைவுச் சின்னமோ, நினைவிடமோ அமைப்பது எந்த வகையில் சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. சட்டரீதியாகவே அது தவறானதாக இருக்கும். அதிலும் அரசு பணத்தில், ஊழல்வாதிக்கு நினைவுஇல்லம் என்பது ஏற்க முடியாது என்று எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன. அணிகள் இணைப்புக்கு ஒப்புக்கு இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிட்டாலும், சட்ட ரீதியாக இதைச் செயல்படுத்த முடியாது என்றே சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இது எல்லாம் தெரிந்தும் அணிகள் இணைப்பில் தீவிரமாக இருக்கின்றார் பன்னீர்செல்வம்.

Advertisement:
[X] Close