• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

சசிகலா ஒப்புதலின்றி வேதா நிலையத்துக்குள் நுழைய முடியாது! வெற்றிவேல் எம்.எல்.ஏ பேட்டி

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

சசிகலாவின் ஒப்புதலின்றி ஜெயலலிதாவின் வேதா நிலையத்துக்குள் அரசு அதிகாரிகள் நுழைய முடியாது. மீறி நுழைந்தால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார். டி.டி.வி.தினகரன் அணி எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பெசன்ட் நகரில் உள்ள தினகரன் இல்லத்தில் நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, வெற்றிவேல் எம்.எல்.ஏ, "ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்கும் முன்பாக வாரிசுதாரர்களின் கருத்துக்களைக் கேட்க வேண்டும். நீதிமன்ற ஆவணங்களின்படி சசிகலாவுக்கும் இளவரசிக்கும் வேதா நிலையம்தான் முகவரி. சசிகலாவின் ஒப்புதலின்றி வேதா நிலையத்தை அரசு எடுக்க முடியாது. சசிகலாவின் ஒப்புதலின்றி அரசு அதிகாரிகள் அந்த வீட்டுக்குள் நுழைவது அத்துமீறலாகும். அத்துமீறி நுழைய முயன்றால் அதைத் தடுப்போம். சட்டப்படி தடுத்து நிறுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்" என்றார். இதனிடையே ஜெயலலிதாவின் இல்லத்தைச்சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சசிகலாவை கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க அதிரடி தீர்மானம் நிறைவேற்ற நிர்வாகிகள் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement:
[X] Close