• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

நள்ளிரவில் ரோந்து செல்லும் கிரண் பேடி

  shriram   | Last Modified : 20 Aug, 2017 01:40 pm

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, அம்மாநிலத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆளுநர்களின் வழக்கத்திற்கு மாறாக ரோந்து செல்வது, அதிகாரிகளை கேள்வி கேட்பது என அவர் செய்த பல நடவடிக்கைகள் அவருக்கும் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பெரும் சண்டையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த வெள்ளியன்று இரவு, ஆளுநர் அலுவலக ஊழியர்களுடன் இரு சக்கர வாகனத்தில், ரகசியமாக புதுச்சேரி சாலைகளில் ரோந்து சென்றுள்ளார் பேடி. பெண்களுக்கு நள்ளிரவில் புதுச்சேரி பாதுகாப்பாக உள்ளதா இல்லையா என சோதிப்பதற்காக சென்றதாகவும், வேண்டுமென்றே தான் ஹெல்மெட் அணியாமல் சென்றதாகவும் அவர் தெரிவித்தார். "புதுச்சேரி பாதுகாப்பாகவே உள்ளது. எந்த குற்றங்களும் நடக்கவில்லை. ஆனால், ரோட்டில் போலீசார் ஒருவர் கூட இல்லை. அவர்களும் மாறுவேடத்தில் இருந்தார்களோ என்னவோ. பலர் பைக்கில் 3 பேராக சென்றனர். வேகமாகவும், அதிக சத்தத்துடனும் பல பைக்குகள் சென்றன. அவர்களை யாரும் தடுக்கவில்லை," என அவர் கூறினார். இதைத் தொடர்ந்து, இனி நள்ளிரவு போலீஸ் ரோந்து செல்லவும், இரு சக்கர வாகனங்களில் கண்காணிக்கவும் காவல்துறையிடம் கேட்டுள்ளார். சினிமா தியேட்டர், பஸ் நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகள் மட்டுமல்லாமல், எந்நேரத்திலும் மக்கள் காவல்துறையை தொடர்பு கொண்டால் உடனே செல்வதற்கு தயாராக இருக்கே வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement:
[X] Close