பசு காப்பகத்தில் மேலும் 90 பசுக்களின் உடல்கள் கண்டெடுப்பு: பா.ஜ.க பிரமுகர் கைது

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 20 Aug, 2017 02:34 pm

சட்டீஸ்கர் மாநிலத்தில், அரசு உதவியுடன் நடத்தப்பட்டு வரும் பசுக்கள் காப்பகத்தில் 27 மாடுகள் இறந்தது தொடர்பாகப் பா.ஜ.க-வைச் சேர்ந்த ஹரிஷ் வர்மாவை போலீசார் கைது செய்தனர். அந்தக் காப்பகத்தில் ஒரே மாதத்தில் 300 மாடுகள் இறந்துள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் துர்க் மாவட்டத்தில் அரசு நிதி உதவியுடன் ஓர் பசுக்கள் பாதுகாப்பகம் செயல்பட்டு வருகிறது. இதைப் பா.ஜ.க-வைச் சேர்ந்தவரும் ஜமுல் நகராட்சித் துணைத் தலைவருமான ஹரிஷ் வர்மா என்பவர் நடத்தி வருகிறார். இந்தநிலையில், அந்தக் காப்பகத்தில் 27 பசுக்கள் இறந்ததாக மாநில பசுச் சேவை அமைப்பு மாவட்ட நிர்வாகத்தில் புகார் செய்தது. இதைத் தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில் பசுக்கள் இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் வர்மாவை போலீசார் கைது செய்தனர். அங்கு சரியான உணவு இல்லாத காரணத்தால் பசுக்கள் இறந்ததாகக் கூறப்படுகிறது. இறந்த பசுக்களின் உடல்களைக் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். பரிசோதனை முடிவில்தான் என்ன காரணத்தால் பசுக்கள் இறந்தன என்பது தெரியவரும். இதற்கிடையே அங்கு தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ஆய்வில், மேலும் 90க்கும் மேற்பட்ட பசுக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.சிங் கூறுகையில், "இந்தக் காப்பகத்தில், பசுக்களைப் பாதுகாக்க எந்த வசதியும் இல்லை. சரியான உணவளிக்கப்படாததால், ஒரு மாதத்தில் மட்டும், 300க்கும் அதிகமான பசுக்கள் இறந்ததாக, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். உயர் நிலைக் குழு விசாரணைக்கு, உத்தரவிட வேண்டும்" என்றார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.