• வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

தடையை மீறி திருவல்லிக்கேணியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துவோம்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

சென்னை திருவல்லிக்கேணியில் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துவோம் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கள் அமைப்பு மூலமாக தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால் நாங்கள் மத கலவரத்தை தூண்ட பார்ப்பதாக அரசும் காவல் துறையும் திசை திருப்ப பார்க்கிறது. இந்துக்களின் ஒற்றுமையை நிலைநாட்டவே இந்த ஊர்வலமானது நடைபெறுகிறது. தமிழகத்தில் மசூதி, சர்ச் இல்லாத இடங்களில் ஊர்வலம் நடத்தலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது. ஆனால் சர்ச், மசூதி இல்லாத இடம் ஏது. ரசாயனம் பூசிய சிலைகளை பயன்படுத்தக் கூடாது என்பது போன்ற நியாயமான தடைகளை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் தேவையற்ற தடைகளை போட்டால் அவற்றை மீறி ஊர்வலம் நடத்துவோம். காவல்துறை அனுமதி மறுத்த திருவல்லிக்கேணி பகுதியில் தடையை மீறி ஊர்வலம் நடத்துவோம். கொங்கு மக்கள் மற்றும் திருச்செங்கோடு கோவிலை இழிவுபடுத்தும் நோக்கில் எழுதப்பட்ட மாதொருபாதகன் நூலை தடை செய்ய கோரி போராட்டம் நடத்தினோம். அதன் மொழிபெயர்ப்பு நூலுக்கு கொடுக்கப்பட்ட சாகித்திய அகாடமி விருதை தடை செய்ய வேண்டும் என கூறி போராடினோம். முதலில் தடை செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் சில தினங்களில் சண்டிகரில் நடைபெறும் விழாவில் இதே விருதை அந்நூலுக்கு வழங்க உள்ளனர். சாகித்திய அகாடமி அமைப்பை கம்யூனிஸ்ட்கள் கைப்பற்றி விட்டனர். அந்த அமைப்பை கலைத்து விட்டு அதில் இருக்கும் இடது சாரி எழுத்தாளர்களை வெளியேற்ற பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நூலுக்கு விருது வழங்கப்பட்டால் தமிழகம் முழுவதும் அந்த நூலை தீயிட்டு எரிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம். கரூரில் உள்ள காவிரி ஆற்றில் மணல் அள்ள போடப்பட்டிருக்கும் தற்காலிக தடையை நிரந்தரமாக்க வேண்டும். கரூர் தொகைமலை பகுதியில் அப்பாவி ஏழை மக்களை ஏமாற்றி இஸ்லாமிய மதத்திற்கு மாற்றும் செயலை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.

Advertisement:
[X] Close